search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹரிவராசனம் பாடல்"

    • ஹரிவராசனம் பாடல் மலை முழுவதும் ரம்மியமாக இசைக்கும்.
    • ஹரிவராசனம் நூற்றாண்டு விழா குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நாளை நடக்கிறது.

    சென்னை:

    சபரிமலை ஐயப்ப பக்தர்களின் மனதில் எப்போதும் ரீங்காரமிடும் பாடல் ஹரிவராசனம். பாடகர் ஜேசுதாசின் தேவகான குரலில் ஒலிக்கும் இந்த பாடல் சபரிமலையில் நடைசாற்றும்போது இசைக்கப்படும்.

    விழா காலங்களில் மலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருப்பார்கள். ஆனாலும் இந்த பாடல் இசைக்கப்படும்போது நிசப்தம் நிலவும். மலை முழுவதும் இந்த பாடல் ரம்மியமாக இசைக்கும்.

    1952-ம் ஆண்டு முதல் இந்த பாடல் சபரிமலையில் இசைக்கப்பட்டு வருகிறது. புகழ் பெற்ற இந்த பாடலை கொன்னகத்து ஜானகி அம்மாள் என்பவர் 1923-ம் ஆண்டு இயற்றி உள்ளார். பாடல் இயற்றப்பட்ட நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாட திட்டமிட்டுள்ளார்கள்.

    இதுதொடர்பாக சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசிய பொதுச்செயலாளர் ஈரோடு ராஜன் சென்னையில் கூறியதாவது:-

    ஹரிவராசனம் நூற்றாண்டு விழா குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நாளை (11-ந்தேதி) நடக்கிறது.

    ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறும் இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நூற்றாண்டு விழா இலட்சினையை வெளியிடுகிறார்.

    விழாவில் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இசைஞானி இளையராஜா, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்த சோபன் உள்பட சுமார் ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள்.

    சபரிமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் செல்ல காரணமாக இருந்த சின்மயானந்த சுவாமி, நவாப் ராஜமாணிக்கம், லிமோ சனானந்த சாமி, குளத்தூர் அய்யர், எம்.என்.நம்பியார், பி.டி.ராஜன் ஆகியோரது வரலாறுகளை கிராமங்கள் தோறும் பரப்ப திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×